சவூதியில் விளையாட்டு போட்டிகளுக்கான தடைகள் நீக்கம்.

132

சவூதியில் விளையாட்டு போட்டிகளுக்கான தடைகள் நீக்கம்.

சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக விளையாட்டு போட்டிகளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த (ஜூன்) 21-ம் தேதி முதல் விளையாட்டு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு தடையை தளர்த்தி, பயிற்சியினை மேற்கொள்ள அனுமதியை வழங்க சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் சுகாதாரக் குழுவுடன் ஒருங்கிணைந்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி விளையாட்டுத்துறை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

[the_ad id=”7251″]

சென்னை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு எதிஹாத் விமானங்கள் இயக்கம்.

ஆகஸ்ட் 4 முதல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ரசிகர்கள் இல்லாமல் விளையாட்டு போட்டிகளை மீண்டும் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சவூதி அரசு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் விளையாட்டு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு  அனுமதி கொடுத்துள்ளதால், விளையாட்டு பயிற்சியின் போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

[the_ad id=”7250″]
Leave a Reply

%d bloggers like this: