Do not click on the link

கொரோனா விசயமாக உங்களுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். 

130

கொரோனா விசயமாக உங்களுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம். Do not click on the link that comes to you as Corona.

கொரோனா குறித்த செய்திகளுடன் உங்களுக்கு அனுப்பப்படும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என அமீரக மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களிடம் உள்ள கொரோனா பற்றிய அக்கறையை தவறாகப் பயன்படுத்தி, அவர்களுக்கு ஆபத்தான இணைப்புகளை அனுப்புவதன் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடவதற்கு ஹேக்கர்ஸ் முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தபடியுள்ளது.

[the_ad id=”7251″]

சவூதியில் காவல் துறையினர் போல நடித்த இருவர் கைது.

இந்தியாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்க தயாராகும் விமான நிறுவனங்கள்!

இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, கொரோனாவிற்கு தொற்று நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை என்பது போல மற்றும் கொரோனாவை மையப்படுத்தி மற்ற செய்திகளை அனுப்புவது போல மற்றவர்களுடைய தனிப்பட்ட அந்தரங்க தகவல்களைத் திருடும் நோக்கத்தோடு அவர்களுடைய ஸ்மார்ட் போன்கள் அல்லது கணினிகளுக்கு உளவு பார்க்கும் மற்றும் வைரஸ்களை பரப்பக்கூடிய ஆபத்தான இணைப்புகளை ஹேக்கர்கள் என்னும் ஆன்லைன் திருடர்கள் அனுப்புவதாக தெரிவித்தனர்.

[the_ad id=”7251″]

பொதுமக்கள் இதுபோலான சந்தேகத்திற்குரிய இணைப்புகளை பார்ப்பதற்காக கிளிக் செய்ய வேண்டாம். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வை தங்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்த ஹேக்கர்கள் இதுமாதிரியான இணைப்பை அனுப்பி அதை ஆர்வமாக திறந்து பார்க்கும் மக்களுடைய புகைப்படங்கள், அந்தரங்க தகவல்கள் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றைத் திருட முயற்சிக்கிறார்கள். அவர்களுக்கு கிடைத்த அந்தரங்க தகவல் மூலம் மிரட்டல் விடுப்பது, பணம் கேட்டு மிரட்டுவது மற்றும் பணத்தினை திருடுவதே இந்த ஆன்லைன் திருடர்களின் நோக்கமாகும் என்று அமீரக காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

[the_ad id=”7250″]




Leave a Reply

%d bloggers like this: