Curfew ends in Kuwait

குவைத்தில் இந்த மாதம் 30 ம் தேதியுடன்  முடிவுக்கு வருகிறது ஊரடங்கு..!

165

குவைத்தில் இந்த மாதம் 30 ம் தேதியுடன்  முடிவுக்கு வருகிறது ஊரடங்கு..!


Gulf News: Curfew ends in Kuwait on the 30th of this month ..!


குவைத்தில் இந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக அந்நாட்டின் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் வளைகுடா நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்த துவங்கியது. பிறகு சிறு சிறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் வைத்திருந்தது. அதே வகையில் குவைத் அரசும் அமல்படுத்தியிருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை இந்த ஆகஸ்ட் 30 ம் தேதியுடன் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Gulf News

கடந்த மார்ச் மாதத்தில் குவைத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர், ஜூலை மாதத்தில் அந்நாட்டில் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்புவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக ஒன்பது மணி நேர ஊரடங்கானது ஆறு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. Gulf News

இருப்பினும், பொது மற்றும் தனியார் இடங்களில் திருமண விருந்துகள், வரவேற்புகள் மற்றும் துக்க விழாக்கள் உள்ளிட்ட பெரிய கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது நீடிக்கும் என்றும் குவைத் அரசாங்கம் தெரிவித்திருந்துள்ளது.

குவைத் நாட்டில் இதுவரை மொத்தம் 78,500 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Keyword: Gulf News, Kuwait News




Leave a Reply

%d bloggers like this: