பொதுப்பணித்துறை பணியிலிருந்து

பொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.!

188

பொதுப்பணித்துறை பணியிலிருந்து 400 அயல்நாட்டவர்கள் பணிநீக்கம்.!


குவைத்: வெளிநாட்டு மக்கள் தொகையை குறைத்து அனைத்து அரசு சார்ந்த துறைகளிலும் குவைத் குடிமக்களையே பணியமர்த்தும் திட்டத்தினை கடந்த சில மாதங்களாக குவைத் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குவைத்தின் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் 400 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 150 வெளிநாட்டு அமைச்சக ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக தற்பொழுது மீதமுள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள ஊழியர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்யும் இந்த திட்டத்தின் அடுத்த கட்டமானது இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னதாக அந்நாட்டின் எண்ணெய் துறைகளில் இனி வெளிநாட்டினரை பணியமர்த்துவது நிறுத்தப்படுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

keywords: gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil,

தொடர்புடைய செய்திகள்

Home with below post
Leave a Reply

%d bloggers like this: