துபாய் ஷார்ஜா இடையே பேருந்து

துபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.!

138

துபாய் ஷார்ஜா இடையே பேருந்து இயக்கம் மீண்டும் துவங்கியது.!


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த துபாய் ஷார்ஜா இடையேயான பேருந்து சேவைகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.

துபாய் ஷார்ஜா இடையே இரண்டு வழித்தடங்களில் சேவைகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

  1. E303 பேருந்தானது துபாய் யூனியன் மெட்ரோ நிலையத்திலிருந்து ஷார்ஜா அல் ஜுபைல் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது.
  2. E307A பேருந்தானது துபாய் அபு ஹைல் மெட்ரோ நிலையத்திலிருந்து ஷார்ஜா அல் ஜுபைல் பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது.

தற்போது மேலுள்ள இரண்டு வழித்தடங்களில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. E315 பேருந்து எத்திசலாட் மெட்ரோ நிலையத்திலிருந்து ஷார்ஜா அல் முவைலா பேருந்து நிலையம் வரை இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் இரண்டு வாரத்திற்கு பிறகு இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள மூன்று மெட்ரோ நிலையங்களான யூனியன் ஸ்கொயர், அபு ஹெயில் மற்றும் எத்திசலாத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி ஷார்ஜாவுக்குத் திரும்பும் பயணிகளுக்கும் அதே போல் துபாயில் பணிபுரியும் ஷார்ஜாவாசிகளுக்கு இந்த வழித்தட பேருந்து இயக்கம் எளிதாக்கும்” என்று RTA-தெரிவித்துள்ளது.

Keywords: gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil,

தொடர்புடைய செய்திகள்

Home with below post
Leave a Reply

%d bloggers like this: