ADVERTISEMENT
Guidelines for eye health

கண்களின் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்

Guidelines for eye health

கண்களின் ஒளியை பாதுகாக்க இந்த வழிமுறைகளை முயற்சிக்கவும். 10 எளிய பயனுள்ள நலக்குறிப்புகள்.

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, முறைமையான கண் பரிசோதனை, சீரான உணவுகள், கண்பார்வைக்கு இடையூறு தரும் மின்னணு சாதனங்களை குறைத்தல், கண் பாதுகாப்பு உடைகள் பயன்படுத்தல் மற்றும் போதுமான ஓய்வுடன் தூங்குதல் ஆகியவை முக்கியம். இது பற்றி விரிவாக பார்ப்போம்

  1. கீரைகள் மற்றும் காய்கறிகள்
    • பண்ணைக் கீரை, முருங்கைக்கீரை, சிறு கீரை, கறிவேப்பிலை கீரை, வெந்தயக்கீரை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் சாப்பிடவும்.
    • கேரட், பப்பாளி பழம், பாதாம், மீன், முட்டை போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்ளவும்.
  2. பொன்னாங்கண்ணிக் கீரை
    • புளி சேர்க்காமல் பொன்னாங்கண்ணிக் கீரையை சமைத்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்.
  3. உள்ளங்கால்களுக்கு நெய்
    • இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன்பு இரு உள்ளங்கால்களின் நடுவிலும் பசுவின் நெய்யைத் தேய்த்து தூங்கவும்.

  1. சந்திர தரிசனம்
    • இரவில் சாப்பிட்டு கை, வாயை சுத்தம் செய்தபின்பு ஒவ்வொரு கண்ணிலும் தலா மூன்று துளி சுத்த நீர் விட்டு, இமைகளை தேய்த்து, சந்திரனை சிறிது நேரம் பார்க்கவும்.
  2. திரிபலா சூரணம்
    • இரவு படுக்கும் முன் தினமும் 1 கிராம் திரிபலா சூரணத்தை சாப்பிடவும்.
  3. தான்றிக்காய் தோல் பொடி
    • 500 மில்லிகிராம்-1 கிராம் தான்றிக்காய் தோல் பொடியை தேனில் கலந்து சாப்பிடவும்.
  4. தூதுவளை காய் மற்றும் கீரை
    • தூதுவளை காய் மற்றும் கீரையை பாகம் செய்து நெய் கூட்டி உணவோடு உண்ணவும்.
  5. தலைக்கு தேய்த்து குளி
    • வாரம் ஒருமுறை, சந்தனாதி தைலம், திரிபலா தைலம், பொன்னாங்கண்ணி தைலத்தை தலைக்கு தேய்த்து குளிக்கவும்.
  6. பஞ்ச கற்ப விதி
    • கடுக்காய் தோல், நெல்லி வற்றல், கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து, மிளகு இவற்றை பொடித்து பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரம் ஒருமுறை குளிக்கவும்.
  7. உணவு மற்றும் தூக்கம்
    • இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டு, 11 மணிக்குள் தூங்கவும். அதிகாலை 4-5 மணிக்கு எழுந்து பழகவும்.
    • தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவாக இணையதளங்களில் கிடைக்கும் தகவல்களாகும். இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். கல்லாறு மீடிய இந்த தகவல்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தவில்லை.)

ADVERTISEMENT

Keywords: Guidelines for eye health, health tips Tamil, Tamil Health Tips

ஆரோக்கியம் சம்மந்தமான தகவல்களை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.

Our Facebook Page

ALSO READ:
தினசரி மாதுளம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சப்ஜா விதைகள்: சத்துக்கள் மற்றும் நன்மைகள்
பாதாம் பிசின்: உடல்நல நன்மைகளின் புதையல்
சிவப்பு அரிசியின் அற்புதமான நன்மைகள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *