நாரணமங்கலத்தில் அழுகிய நிலையில் மூதாட்டி பிணம். Grandmother’s body found in a decomposing state.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் தனியார் தொழிற்சாலைக்கு பின்புறத்தில் உள்ள வாரியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இதை அறிந்த பொதுமக்கள், பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்த மூதாட்டியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது, தெரியவந்தது. மேலும் அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து போலீசார், அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
keywords: Grandmother’s body, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.