Graduate girl commits suicide

தாய் கண்டித்ததால் விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை.

460

தாய் கண்டித்ததால் விஷம் குடித்து பட்டதாரி பெண் தற்கொலை.

Graduate girl commits suicide.

வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மங்களமேட்டை அடுத்துள்ள வாலிகண்டபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தங்கராசு. விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் விஷ்ணுபிரியா(22) பி.எஸ்சி. பி.எட். படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் வேலை செய்யாமல், டி.வி. பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், இதனால் அவரை அவரது தாய் பெரியநாயகி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த விஷ்ணுபிரியா அரளி விதையை(விஷம்) அரைத்து குடித்து மயங்கி கிடந்தார். வயல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த தங்கராசு, மயங்கி கிடந்த விஷ்ணுபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஷ்ணுபிரியா, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Perambalur Seithigal, Graduate girl commits suicide.




%d bloggers like this: