Government transport workers demonstrated

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

421

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். Government transport workers demonstrated.

பெரம்பலூரில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நேற்று துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக் கழக விடுப்பு விதிகளை மாற்றக் கூடாது. வார விடுப்பை பறிக்கக்கூடாது. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளைத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில், அரசு போக்குவரத்துக் கழக பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

Keywords: transport workers, Government transport, demonstrated




%d bloggers like this: