தூங்கிய பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலி திருட்டு.
Gold chain theft from woman.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பழனியம்மாள்(வயது 45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினர்.
நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, பழனியம்மாளின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த பழனியம்மாள், மர்ம நபர் சங்கிலியுடன் ஓடுவதை கண்டு திருடன்…, திருடன்… என்று சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினத்தந்தி
Keywords: Perambalur district News, Perambalur Seithigal, Perambalur Mavttam, Gold chain theft
You must log in to post a comment.