Gold chain snatched

பெரம்பலூரில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு

422

பெரம்பலூரில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு. Gold chain snatched from woman

பெரம்பலூர் சாமியப்பா நகரை சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மனைவி புவனம்மாதேவி (வயது 45). இவரது கணவர் இறந்து விட்டார். மகன் சென்னையில் உள்ளார். இவர் நேற்று மதியம் வெங்கடேசபுரத்தில் உள்ள பர்னிச்சர் கடைக்கு தனது ஸ்கூட்டரில் சென்றுவிட்டு ரோவர் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவரது ஸ்கூட்டரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் வந்தனர். முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே புவனம்மாதேவி வந்தபோது அவரை நெருங்கிய மர்ம நபர்களில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்தவர் திடீரென புவனம்மாதேவி கழுத்தில் அணிந்திருந்த டாலருடன் கூடிய 11 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்பு இருவரும் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்று விட்டனர். மர்ம நபர்களிடம் 11 பவுன் சங்கிலியை பறிகொடுத்த புவனம்மாதேவி இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Keywords: Gold chain snatched, Gold Chain, Perambalur




%d bloggers like this: