கை.களத்தூர் அருகே வயலுக்கு சென்று திரும்பியவரிடம் தங்க சங்கிலி பறிப்பு. Gold chain flush.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் பாதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்(வயது 55). இவர் நேற்று கை.களத்தூர் – பசும்பலூர் சாலையில் உள்ள தனது வயலுக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
அப்போது செல்லம்மாள் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தாலிச் சங்கிலியைப் பறித்துச்சென்ற கொள்ளையர்களை பிடிக்க முயன்றும் தப்பிச்சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செல்லம்மாள் கை.களத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
keywords: Gold chain flush, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.