கடவுள் வந்து வரமெல்லாம் தரமாட்டார்.
God will not come directly and bless.
காட்டாற்று வெள்ளம்
திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நான்கு நண்பர்கள் சிக்கிக் கொண்டனர். இதனால் நான்குபேரும் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினார்கள்.
அப்போது அதில் ஒருவன் கூறினான், ‘நண்பர்களே பக்கத்தில் தெரிகிற மரத்தில் ஏறிக் கொண்டால் அதன் வழியாக அந்த பக்கத்தில் இறங்கி விடலாம் என்றான்’ இதுதான் சரி என்று மற்றவர்கள் கூற ஒருவன் மட்டும் இதை ஏற்று கொள்ளாமல் ‘அவசரப்படாதீர்கள் நண்பர்களே கடவுள் நம்முடன் இருக்கிறார், அவர் நம்மைக் காப்பாற்றுவார்’ என்று கூறினான். அதைக்கேட்ட இருவர் ஏற்றுக் கொண்டனர். ஒருவன் மட்டும் மரக்கிளையை பிடித்து ஏறி உயரமான பகுதிக்குச் சென்றுவிட்டான்.
மேலே சென்றவன் ‘நண்பர்களே அங்கே பாருங்கள் நல்ல வழுவான மரக்கட்டை வருகிறது அதைப் பயன் படுத்தி அந்த இடத்திலிருந்து தப்பிவிடுங்கள்’ என்றான். இதைக் கேட்ட ஒருவன் மரக்கட்டையைப் பயன் படுத்தி அவ்விடத்திலிருந்து தப்பித்துக் கொண்டான். மற்ற இருவர் அங்கே நின்றார்கள்.
‘இப்போதாவது நான் சொல்வதை கேளுங்கள் உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மரத்தில் ஏறிக்கொண்டு உச்சிக்கு செல்லுங்கள் தண்ணீர் வடிந்தவுடன் கீழே இறங்கிவிடுங்கள்’ என்றான். இதைக்கேட்டதும் மற்றவனும் மரக்கிளையைப் பிடித்து ஏறி மரத்தின் உச்சிக்குச் சென்று விட்டான்.
கடவுள் தன்னை காப்பாற்றுவார் என்று நம்பினவன் மட்டும் அங்கேயே இருந்தான். வேகமாக வந்த ஒரு அலையில் சிக்கி தண்ணீரோடு அடித்துச் செல்லப்பட்டான்.
கடவுள் அவனைக் காப்பாற்றவே இல்லையே (God will not come directly)
இதை அங்குள்ள மூவரும் பார்த்து வருத்தப் பட்டனர். தண்ணீர் குறைந்தவுடன் மூவரும் இணைந்து கொண்டனர். தனது நண்பனுக்காக வருத்தப்பட்டனர். வருத்தத்துடன், “அவன் அந்த கடவுளை எவ்வளவு நம்பினான் இருந்தும் அந்த கடவுள் அவனைக் காப்பாற்றவே இல்லையே” என்று கடவுளைத் திட்டி தீர்த்தனர்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பெரியவர் ஒருவர் அவர்களைக் கூப்பிட்டு நடந்த விசயத்தை முழுவதுமாக கேட்டறிந்தார். அவர்களும் தனது நண்பனைக் காட்டாற்று வெள்ளத்தில் சென்றது வரை கூறினார்கள். கூறிவிட்டு, அவன் கடவுள் மேல் ரொம்பவும் நம்பிக்கை வைத்திருந்தான் ஆனால் அந்த கடவுள் அவனைக் காப்பாற்றவில்லை அப்படி என்றால் கடவுள் இருக்கிறாரா? இல்லையா என்று அந்த பெரியவரிடம் கேள்வியை எழுப்பினார்கள்.
கடவுள் இருக்கிறார், அதை நாம் தான் உணருவதில்லை…
கடவுள் தான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள மூன்று முறை வாய்ப்பை தந்தார். அதன் மூலமாகத் தான் உங்கள் மூவரையும் காப்பாற்றியுள்ளார். இது உங்கள் நண்பனுக்கு புரியவில்லை அதனால் அவன் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டான் என்று கூறினார்.
நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஒன்றுமே புரியவில்லையே என்றனர். காட்டாற்று வெள்ளம் வந்த உடனே நீ அந்த மரத்தில் ஏறித் தப்பினாயே அந்த வாய்ப்பு கடவுளால் உங்களுக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பு, மற்றொரு கட்டை வந்ததே அது இரண்டாவது வாய்ப்பு அதில் இவன் தப்பித்தான், மூன்றாவதாக பக்கத்தில் உள்ள மரத்தில் ஏறி உச்சிக்குப் போக நீ தானே கூறினாய். அந்த வாய்ப்பையும் கடவுள் உன் மூலமாகத்தான் சொல்ல வைத்தார் அதில் உன்னுடைய மற்றொரு நண்பன் தப்பித்தான். இவை அனைத்தையும் விட்டு விட்டு கடவுள் நேரடியாக வந்து கையிரு போட்டுத் தூக்கிவிடுவார் என்று நினைத்து இருப்பது தவறு. அப்படிப் பட்ட நினைவிலிருந்தால் இதுபோலத்தான் நடக்கும் என்றார். அந்த பெரியவரின் வார்த்தைகளில் உண்மை இருப்பதை உணர்ந்த நண்பர்கள் நன்றி கூறி சென்றனர்.
உலகத்தில் பலரும் அப்படித்தான் கடவுள் நமக்காக நேரடியாக வந்து காட்சி தந்து வரம் கொடுப்பார், வரம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஒவ்வொரு வாய்ப்பையும் விட்டு விட்டும், தட்டிக் கழித்தும் போகிறோம். பிறகு தோல்வியைச் சந்திக்கிறோம் பிறகு கடவுளைத் திட்டிக் கொண்டே இருக்கிறோம்.
நேரடியாகக் கடவுள் வந்து நமக்கு வரமெல்லாம் தரமாட்டார். நாம் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை முறையாகப் பயன் படுத்தி வெற்றி அடையவேண்டும்.
Keywords: God will not come directly
You must log in to post a comment.