பெரம்பலூரில் வெள்ளாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி

பெரம்பலூரில் வெள்ளாடு வளர்ப்பு இலவசப் பயிற்சி பெரம்பலூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வரும் 6ஆம் தேதி வெள்ளாடு வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பெரம்பலூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர்- செங்குணம் பிரிவுச்சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெறும் முகாமில் வெள்ளாடு வளர்ப்பு இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர் மையத்தை நேரில் அல்லது 93853-07022 எனும் எண்ணில் தொடர்புகொண்டு பெயரை பதியலாம்.

 

32total visits,2visits today




Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: