ஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா?

2672

ஆட்டு சாணத்தை ஏற்றுமதி செய்யலாம் தெரியுமா?


Goat dung can be exported!


நகர்புறத்தில் உள்ளவர்கள்தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்பை தெரிந்து கொண்டு செயலில் இறங்குகின்றனர். மேலும், இவர்களுக்கு தேவையான 80 சதவீத மூலப்பொருள்கள் கிராமங்களில் இருந்துதான் கிடைக்கிறது.

கிராமங்களில் உள்ள மக்கள் புதிய வாய்ப்பைகளை தெரிந்து, செயலில் இறங்கினால் மிக அதிகமாக வருமானம் பெற முடியும் என்பதற்கு சிறந்த ஓர் எடுத்துகாட்டு, இந்த ஆட்டு சாணம் விற்பன. ஆட்டு சாணத்தில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் காரணமாக இயற்கை விவசாயத்தில் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வளைகுடா நாடுகளில் பாலைவனத்தில் விவசாயம் செய்ய அதிக அளவில் ஆட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இந்தியாவில் 1 கிலோ ஆட்டு சாணம் அமோசான் மற்றும் பிளிப்கார்ட் – டில் ரூபாய் 200 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆதாரம்

ஆட்டு சாணத்தை விற்பனை செய்ய முடியுமா?

நிச்சயமாக, விற்பனை என்ன ? நீங்களே ஏற்றுமதியே கூட செய்யலாம்.

ஆட்டு புழுக்கையை சேமித்து அதனை ஆட்டு சாணமாக்கி, உரமாக்கி 5 / 10 / 25 / 50 கிலோ முட்டைகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி சாத்தியம் தான்.

மேலே காணும் அட்டவணையில் ஆட்டு புழுக்கை / சாணம் பயன்படுத்துவதால் உள்ள பயன்களை பற்றிய சில தகவல்களை நாம் அறியலாம்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில ஆட்டு சாணம் ஏற்றுமதி செய்பவர்களின் பட்டியலை இங்கே பகிர்கிறேன்.

01. டாக்டர் பி.விமலநாதன், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர், அஜினெக்ஸ் பிசினஸ் வென்ச்சர்ஸ் பி லிட் & அஜில் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ், # 1/263 ஏ, தேவரசம்பட்டி, ஏ.ஜெட்டி ஹள்ளி, தர்மபுரி – 636 807 மொபைல் : 98949 99830
இணைய முகவரி : http://www.agileindiaexports.com/

02. திரு முருகேசன், இயக்குனர், விஜய் எக்ஸ்போர்ட்ஸ், # 4/85 A, அய்யனார் கோவில் தெரு, அலவகோட்டை, சிவகங்கை – 630 553 மொபைல்: 99651 07335
இணைய முகவரி : www.vijayexports.net.in

03. திரு. ICA அருண், # 97 ஜG/7A/1, 3வது தெரு, டீச்சர்ஸ் காலனி (மேற்கு), தூத்துக்குடி – 628 008 மொபைல்: 98946 14630 தொலைபேசி: 0461 – 2311995 மின்னஞ்சல்: [email protected]
இணைய முகவரி : https://homekrafts.webs.com/

இந்த புதிய விதையை நமது வாசகர்களிடம் கொடுத்தாச்சு, அதை மரம் ஆக்குவதும், மக்க செய்வதும் உங்கள் கைகளில்.

நன்றி மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்களுடன்

திரு. முருகானந்தம்
BJP மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வளர்ச்சி செயலாளர்
சிவகங்கை
9943847847

நன்றி – சிறுதொழில் முனைவோர்
%d bloggers like this: