காதலிக்க வற்புறுத்தியதால் சானிடைசர் குடித்து சிறுமி தற்கொலை முயற்சி.
Girl tried to commit suicide by drinking sanitizer.
காதலிக்க வற்புறுத்தியதால் சிறுமி சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
காதலிக்க வற்புறுத்தல்
பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மகன் முத்துக்கிருஷ்ணன் (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் உடற்கல்வி படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தன்னை காதலிக்குமாறு 15 வயதுடைய சிறுமியை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த சிறுமி சம்பவத்தன்று சானிடைசர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கைது
இது தொடர்பாக சிறுமியின் தந்தை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Keywords: Girl tried to commit suicide, சிறுமி தற்கொலை முயற்சி
You must log in to post a comment.