Girl and Friend Arrested for Dangerous Building Stunt
உயரமான கட்டிடத்தில் தொங்கியபடி சாகசம் செய்த வீடியோ எடுத்த பெண் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.
புனேவில் ஒரு பழைய கோவில் கட்டடத்தின் மேல் மிகவும் ஆபத்தான சாகசத்தை செய்து வீடியோ எடுக்க முயன்றதாக ஒரு ஆண் மற்றும் பெண்ணை கைது செய்துள்ளனர். மிஹிர் காந்தி (27) மற்றும் மினாக்ஷி சாலுங்கே (23) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். வீடியோ எடுக்கும் மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார்.
“இந்த வீடியோ பற்றி தகவல் கிடைத்தவுடன் விசாரணையை தொடங்கி அவர்களை கண்டுபிடித்தோம். அவர்கள் நேற்று இரவு பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களை IPC பிரிவு 336 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அப்பகுதி போலீஸ் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் தசரத் படில் தகவல் தெரிவித்தார்.
இந்த குற்றம் சிறியதாக இருப்பதால், ஆறு மாதத்திற்கும் குறைவாக சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். ஆனால் காவலில் வைக்கப்பட மாட்டார்கள் என்று படில் கூறினார்.
இந்த வாரம் தொடக்கத்தில், புனே மக்கள் இந்த நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத வீடியோ எடுப்பவர் ஒரு பழைய கோவில் கட்டடத்தின் மேல் ஆபத்தான சாகசத்தை செய்து காட்டிய வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மிஹிர் காந்தி கோவில் கூரையின் விளிம்பில் படுத்திருக்கும் போது, சாலுங்கே, சிரித்தபடி, கீழே இறங்கி, அவரது கையை பிடித்துக் கொண்டு, 10 மாடிகளுக்கு சமமாக உயரம் கொண்ட கட்டிடத்தின் மேல் தொங்கிக் கொண்டிருந்தார்.
இந்த வீடியோ, கட்டிடத்தின் உயரத்திலிருந்து கீழே உள்ள ஆழத்தை காட்டியது. அப்போது சாலுங்கேவின் பிடி தவறினால் வாகனங்கள் வேகமாக செல்லும் சாலையில் அந்த பெண் விழுந்து உயிரிழக்கும் அபாயம் இருந்தது.
வீடியோ வைரலானதும் மக்கள் இந்த தம்பதிக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். ஏனெனில் சாகசம் செய்து வீடியோ எடுப்பதாக நினைத்து அவர்கள் தங்கள் உயிரை ஆபத்திற்குள்ளாக்கி காட்டுகின்றனர். இந்த வகை விளையாட்டு இளைஞர்களுக்கு மோசமான எடுத்துக்காட்டாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.
வீடியோ எடுக்க உதவிய மூன்றாவது நபரை பிடிக்க போலீஸ் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவரை விரைவில் பிடிப்போம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Keywords: Dangerous Building Stunt, Tamil news today, India News, India Tamil News
ALSO READ:
விசிட் விசாவில் அமீரகத்திற்கு வருவபவர்களுக்கு முக்கிய பயண ஆலோசனை!
துபாய்: இந்த ஆண்டில் இ-ஸ்கூட்டர் மற்றும் சைக்கிள் விபத்துகளில் 4 பேர் பலி