ஜீரணத்திற்கு உகந்த இஞ்சி.

ஜீரணத்திற்கு உகந்த இஞ்சி.

வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுக்கும். வயிற்று உபாதைகளைத் தீர்க்கும். இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத்  தொல்லை நீங்கும்.

இஞ்சி மலச்சிக்கலைப் போக்கும். மேலும் களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்.
ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும். ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவ நல்ல பலன் கிடைக்கும்.
சளி, தும்பல், உருமலைக் கட்டுப்படுத்தும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா,  இரைப்பு, இருமல் குணமாகும்.
சுவாசப் பிரச்சனைகளைச் சரிசெய்யும். இஞ்சி, சுவாசக் கோளாறுகளை சரிசெய்வதற்கான ஒரு சிறந்த நிவாரணி. இது ஆஸ்துமா மற்றும் பல  சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.இது நெஞ்சில் இருக்கும் கபத்தை கரைக்கிறது.
உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும். நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும். ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் அவ்வப்போது இஞ்சி சாப்பிட்டு வந்தார்களேயானால் அவர்களின் ஒவ்வாமை நீங்குவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது.
இஞ்சி உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும். தினந்தோறும் காலையில் சர்க்கரை பாகில் ஊறவைக்கப்பட்ட இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் நச்சுகள் நீங்கி, ஜீரண தன்மை மேம்படும்.
மாதவிலக்கு வலியைக் குறைக்கும். இக்காலங்களில் அடிவயிற்றில் மிக கடுமையான வலி ஏற்படுகிறது. இக்காலங்களில் இஞ்சி சார்ந்த உணவு பொருட்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் இருக்கும் மெபனமிக் அமிலம் மாதவிடாய் கால வலியை குறைப்பதில் சிறப்பாக  செயலாற்றுகிறது.

22total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: