Ginger Benefits

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி..! Ginger benefits

699

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி..! Ginger benefits in Tamil

இஞ்சி இது பூமிக்கடியில் விலையும் ஒரு அற்புதமான மூலிகை என்றே சொல்லலாம். இது உணவின் சுவையைக்கூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. காரமான ருசி கொண்ட இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனால் இது சமையல் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. அதனால் தான் நமது முன்னோர்கள் இஞ்சியை உணவுகளில் சேர்த்துள்ளனர்.

இஞ்சியில் என்ன இருக்கிறது?

 ஜிஞ்சரால், ஜிஞ்சிபெய்ன், மாவுசத்து, புரோட்டீன் ஆகியவைகள் அதிகமாக இருக்கிறது.

இஞ்சியின் பயன்கள்: Ginger benefits

  • வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்யவும், வாந்தியை நிறுத்துவதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இஞ்சியை சீனர்கள் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • மூட்டு வலிக்கு இஞ்சி சிறந்த மருந்து.
  • வாந்தியை சமாளிக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. ஆகையால் பக்க விளைவுகள் உண்டாக்காத வாந்தி தடுப்பு மருந்தாக இஞ்சியை பயன்படுத்தலாம்.
  • இதில் உள்ள காரத்தன்மை காரணமாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழித்து புற்றுநோய் வரவிடாமல் பாதுகாக்க உதவுகிறது.
  • பீனால் மற்றும் ப்ளேவோனாய்டுகள் இருப்பதால் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுகிறது. இதன்மூலம் மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

இஞ்சியின் மருத்துவ பயன்கள்: benefits of ginger in Tamil

  • ஒரு சிறிய துண்டு இஞ்சியை அரைத்து பேஸ்ட்டாக்கி தண்ணீரில் கலந்து நெற்றியில் தடவ ஒற்றைத் தலைவலி நீங்கும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இஞ்சி சாறு பருகி வருவதன் மூலம் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
  • செரிமான பிரச்சனை நீங்கி நல்ல பசி எடுக்க இஞ்சி சாறு பருகலாம். மேலும் வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சியின் பங்கு அதிகம்.
  • இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு  கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து குடித்தால்  செரிமான பிரச்சனைகள் தீரும். அதுவும் காலையில் பருகுவதன் மூலம் செரிமான மண்டலம் சுத்தமாவதுடன் அதன்  செயல்பாடுகளும் அதிகரிக்கும்.

இஞ்சியில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். இனிமே வயிறு உப்புசமா இருந்தா ஒரு இஞ்சி முறப்பா வாங்கி சப்பிட்டு போங்க எல்லாம் சரியா போயிடும்.

Our Facebook Page

Keywords: Ginger Benefits, benefits of ginger in Tamil,




%d bloggers like this: