Getting-to-Saudi-is-easy..

வாகனம் மூலம் அமீரகத்திலிருந்து சவுதிக்கு எளிமையாக செல்லலாம்.!

155

வாகனம் மூலம் அமீரகத்திலிருந்து சவுதிக்கு எளிமையாக செல்லலாம்.!

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வாகனத்தில் செல்வோர் சவுதிக்கு எளிமையாக செல்லலாம். இதற்காக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. Getting to Saudi is easy

ஐக்கிய அரபு அமீரகம் தற்போது ஒரு புதிய செயல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஸ்மார்ட் லேண்ட் பார்டர்ஸ் கிராசிங் சிஸ்டம் என்பதாகும்.  ஏற்கனவே அமீரக எல்லையை கடக்கும் போது சுங்க சோதனைக்காக வாகனத்தில் இருந்து இறங்கி சோதனைகள் முடிக்க வேண்டும்.

தற்போது ஸ்மார்ட் லேண்ட் பார்டர்ஸ் கிராசிங் சிஸ்டத்தில் வாகனத்தில் இருந்தபடியே அனைத்து சுங்க சோதனைகளும் முடிக்கும் செயல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நேரம் அங்கே நிற்காமல் விரைவாக செல்வதற்கு இது வழிவகை செய்கிறது.

இதைபற்றி விரிவாக கூறும்போது, அமீரகத்திற்கும் சவுதி அரேபியாவிற்கும் குவைஃபாத் பகுதியானது சாலை வழியில் முக்கிய எல்லையாக இருக்கின்றது. இதன் வழியாக ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான அமீரக மக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உம்ராவிற்கும், மத சுற்றுலாவிற்கும் சென்று வருகின்றனர். Getting to Saudi is easy

இந்த புதிய நடைமுறையால் அண்டை நாடான சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வது தடையின்றியும் வேகமாகவும், எளிமையாக செல்ல வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் லேண்ட் பார்டர்ஸ் கிராசிங் சிஸ்டத்தைப் பயன்படுத்துவதற்கு, வாகன ஓட்டிகள் தங்கள் கார்களை தங்கள் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும். சிஸ்டம் கார் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்து டிரைவருக்கு முதல் தடையைத் திறக்கும். இரண்டாவது கட்டத்தில், மக்கள் தங்கள் பாஸ்போர்ட், எமிரேட்ஸ் ஐடி மற்றும் பயோமெட்ரிக்ஸ் அல்லது முக அங்கீகாரத்தை ஸ்கேன் செய்வார்கள். குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி அமைப்பானது அதன் தரவைச் சரிபார்க்கும். தரவுகள் சரியானதாக இருக்கும் பட்சத்தில் வாகன ஓட்டிகள் அங்கிருந்து செல்ல அனுமதி வழங்கப்படும்.

இவற்றில் ஏதேனும் பிரச்சனை என்றால் பழைய முறையில் சரிபார்த்து அனுமதி வழங்கப்படும் என்பதாக தெரிவித்துள்ளனர். தற்போதைய அமைப்பு காரில் அதிகபட்சம் இரண்டு பேர் வரை இந்த முறையில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் ஒரே வாகனத்தில் அதிகமான மக்கள் இந்த அமைப்பைப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி அமீரகத்திலிருந்து சவுதி அரேபியாவிற்கு சென்று வர மிக எளிமையாக இருக்கும்.

Our Facebook Page

Keyword: Saudi News, UAE News, UAE Tamil News, Getting to Saudi is easy, Tamil news, Saudi Tamil News

கருப்பு கவுணி அரிசியை அமீரகத்தில் Amazon-ல் ஆர்டர் செய்ய




Leave a Reply

%d
Verified by MonsterInsights