UAE: Friday prayer sermon time reduced.
அமீரகத்தில் அதிகமாக இருக்கும் கோடை வெப்பம் காரணமாக வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையின் (ஜும்ஆ) பிரசங்க (குத்பா) நேரம் 10 நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
தொழுகைக்கு வருபவர்களுக்குக் கோடை வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்பு நடைபெறும் சிறப்புப் பேருரை 10 நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீரக அதிகாரிகள் அறிவித்துள்ளதாக அமீரக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது அமீரகத்தில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 28) முதல் அக்டோபர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறப்பணிகள் ஆணையம் நேற்று (வியாழக்கிழமை) அனைத்து பள்ளி இமாம்களுக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமையில் நடத்தப்படும் பிரசங்கம் சுமார் 20 நிமிடங்கள் இருக்கும். அதைக் குறுகிய நேரத்தில் வழங்கும்படி அறிவுறுத்தியது.
இந்த வாரம், சில பாலைவன பகுதிகளில் வெப்பநிலை 50ºC எட்டிய நிலையில், கடலோர நகரங்கள் துபாய் மற்றும் அபுதாபியில் வெப்பநிலை நடுத்தர நாற்பதுகளிலிருந்தது. மேலும் சில நேரங்களில் அதிக ஈரப்பதம் காணப்பட்டது.
சில மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளுக்கு மிகுந்த கூட்டம் வருவதால் தெருவில் மற்றும் பாதைகளில் வெளியே நின்று தொழுகிறார்கள். நேரடி சூரிய ஒளியில் தொழுகும் நிலை உண்டாகிறது. அவர்களுக்கு வெப்பம் காரணமாக அதிக வியர்வை வரும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
தொழுகையாளிகளுக்கு பாதுகாப்பு முக்கியமானது என்று ஷார்ஜாவின் அல்ஷோயூக் மசூதியின் இமாமாக இருக்கும் யாஹியா முகமது கூறினார். மசூதிகளின் கதவுகள் ஒட்டியும், அதன் சுற்றுப்புறங்களில் வெளியில் பலர் தொழுகின்றனர். அவர்களுக்கு வெப்பத்திலிருந்து பாதுகாப்பு முக்கியம் என்று தெரிவித்தார்.
இந்த முடிவைப் பலரும் வரவேற்றுள்ளனர். இது பிரார்த்தனையில் கலந்துகொள்ள எளிதாகவும், அதிகமான வெப்பத்தைப் பற்றிய கவலையின்றி செயல்படுவதற்கும் உதவுவதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிக ஈரப்பதம் மற்றும் வெப்பத்தின் காரணமாகத் திறந்த வெளியில் வேலைகள் செய்வது மிகவும் சவாலானது. சில நேரங்களில் ஆபத்தானவையாகவும் இருக்கிறது.
கடந்த வாரம், சவுதி அரேபியா அரசும் கோடை வெயிலின் காரணமாகக் கொண்டு பிரசங்கங்களை 15 நிமிடங்களுக்குக் குறைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
keywords: Friday prayer, UAE Tamil News, Gulf Tamil News, GCC Tamil News, Dubai Tamil News.
ALSO READ:
குவைத்தில் ஹலால் உணவுக்கான புதிய விதிமுறைகள்
UAE : கூட்ட நெரிசலை தடுக்க ஆன்லைன் செக்-இன்.!
மஸ்கட் – ரத்தம் தானம் செய்ய பொதுமக்களுக்கு அழைப்பு
ஷார்ஜா: கோடை வெயிலுக்கு இலவச மோர் வழங்கி வரும் தமிழர் உணவகம்.