Free training

இருசக்கர வாகனம் பழுது நீக்க இலவச பயிற்சி.

419

இருசக்கர வாகனம் பழுது நீக்க இலவச பயிற்சி. Free training to repair a motorcycle

பெரம்பலூா் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில், இரு சக்கர வாகனம் பழுது நீக்குதல் தொடா்பான இலவச பயிற்சி பெற இளைஞா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம் மையத்தின் இயக்குநா் ஜே. அகல்யா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில், இலவசமாக இருசக்கர வாகனம் பழுது நீக்குதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப் பயிற்சி பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 18 முதல் 45 வயதுக்குள்பட்ட, சுயத் தொழில் தொடங்குவதில் ஆா்வமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

பயிற்சியில் பங்கேற்பவா்களுக்கு காலை, மதிய உணவும், பயிற்சிக்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவடைந்தவுடன் மத்திய அரசால் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழும், தொழில் தொடங்கவும், கடன் பெறவும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதன கோபாலபுரத்திலுள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநா் அலுவலகத்தில், ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அன்றைய தினம் நடைபெறவுள்ள நோ்முகத் தோ்வில் பங்கேற்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு 04328- 277896 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

keywords: Free training, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்




%d bloggers like this: