அமீரகத்தில் இஸ்லாமியப் புத்தாண்டையொட்டி இலவச பார்க்கிங்..!
Free parking in Abu dhabi & Dubai on the occasion of Islamic New Year..!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாமியப் புத்தாண்டை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது.
மேலும் இஸ்லாமிய புத்தாண்டு தினத்தில் அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாய் வாகனங்களை இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அமீரக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய அமீரகத்திலுள்ளோர்கள் இந்த இலவச பார்க்கிங்கை பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் இஸ்லாமிய புத்தாண்டின் காரணமாக, வாகன ஓட்டுநர்கள இன்று (ஜூலை 21, வெள்ளிக்கிழமை) இலவசமாக (Free Parking) வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். இந்த செய்தியை அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், வாகன ஓட்டிகளுக்கு குடியிருப்பு பகுதிகளில் பார்க்கிங் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியு்ள்ளது. அதன்படி, தினமும் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல், இன்று டார்ப் சாலை சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் கார்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து துறையும் இன்று (ஜூலை 21) துபாயில் உள்ள பொது பார்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இலவசம் என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் இது மல்டி ஸ்டோரி கார் பார்க்கிங் பகுதிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன ஓட்டுநர்கள் விடுமுறை தினங்களில் எந்த எந்த பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினால் அபராதத் தொகையை தவிர்க்க முடியும் என்று பார்த்து வாகனங்களை நிறுத்த பயன்படுத்துமாறு முனிசிபாலிட்டி அறிவுறுத்தியுள்ளது.
Keywords: Dubai News, Ameeraga Seithigal, UAE News, Dubai Seithigal, Free Parking, Free parking for Holiday