Free corona test

அபுதாபி வருவோருக்கு இலவச கொரோனா பரிசோதனை..!

143

அபுதாபி வருவோருக்கு இலவச கொரோனா பரிசோதனை..! Free corona test

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்தபிறகு சுமார் 90 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமீரகத்தில் முதன்முறையாக இலவசமாக கொரோனா பரிசோதனை எடுக்கும் இடமாக அபுதாபி விமான நிலையம் இருக்கும் என அமீரக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

ஒரு நாளைக்கு 20,000 பேருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கவும், பயண விதிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை இந்த ஆய்வகம் மேற்கொண்டு வருவதாக  தெரிவித்துள்ளது.

ப்யூர் ஹெல்த் மற்றும் டாமோ ஹெல்த்கேர் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் பலனாக இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் ஒன்று மற்றும் மூன்றாம் முனையம் வழியாக வருபவர்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனையானது எடுக்கப்படும்.

கொரோனா பரிசோதனை முடிவுகளானது SMS, வாட்சாப் மற்றும் AlHosn அப்ளிகேஷன் வழியாக வெளியிடப்படும். நான்காயிரம் சதுர மீட்டரில் அமைந்திருக்கும் இந்த பரிசோதனை கூடத்தில் 190 ஊழியர்கள் அயராது உழைத்துவருகின்றனர்.

அபுதாபிக்கு வருவோர் பயண நாளுக்கு முன்னதான 4 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழை பயணிக்கும் போது சமர்பிக்கவேண்டும். செக் இன் செய்யும்போது கொரோனா இல்லை என்கிற (நெகட்டிவ்) சான்றிதழை பிரிண்ட் எடுத்து கொடுக்க வேண்டும்.

our facebook page

Keywords: Free corona test, Corona test, Abudhabi news tamil, Gulf news tamil, tamil gulf news,




Leave a Reply

%d bloggers like this: