ADVERTISEMENT
Free buttermilk in summer in Sharjah

ஷார்ஜா: கோடை வெயிலுக்கு இலவச மோர் வழங்கி வரும் தமிழர் உணவகம்.

Free buttermilk in summer in Sharjah

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை பருவம் தொடங்கியதால் கடுமையான வெப்பம் பொதுமக்களை கஷ்டப்படுத்துகிறது. இத்தகைய சூழலில், ஷார்ஜாவில் உள்ள ஒரு தமிழ் உணவகம் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஷார்ஜாவின் அபுஷகாரா பகுதியில் உள்ள மதுரை உணவகத்தின் உரிமையாளர் பாபு முருகன், ஜூன் 22 சனிக்கிழமை முதல் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை, தனது உணவகத்திற்குள் வருபவர்களுக்கு இலவச மோர் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த சேவை கோடை பருவம் முழுவதும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாபு முருகன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “கோடை வெப்பத்தில் வாடிக்கையாளர்கள் குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்ததும் ஆரோக்கியமானதும் என்பதால் மோர் வழங்க முடிவு செய்தேன். இது குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிப்பதுடன், கோடை வெப்பத்தில் ஏற்படும் சோர்வை தடுக்கவும் உதவும்,” என்றார்.

மேலும், “உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தாராள மனப்பான்மையுள்ள தனிநபர்கள் தண்ணீர் குளிரூட்டிகளை நிறுவி, குளிர்ந்த தண்ணீரை இலவசமாக வழங்குவது மிகச் சிறந்த செயலாகும். எனது முயற்சி இதேபோன்ற கருணை செயல்களுக்கு உத்வேகம் அளிக்குமென நம்புகிறேன்,” என்றார். முருகன் இது பற்றி கூறிய போது தனது முயற்சி கோடை வெப்பத்தில் உதவியாகவும் இது போல மற்றவர்களையும் செய்ய ஊக்குவிக்கும் என்று நம்புவதா தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதேபோல், ஷார்ஜாவி, 68 வயதான பாகிஸ்தான் பைக்கர் முகமது தாவூத், வார இறுதி நாட்களில் இலவச பாட்டில் தண்ணீரை விநியோகித்து வருகிறார். வயது முதிர்ச்சியால் பல பொருளாதார பிரச்சனைகளை சந்தித்தபோதும், அவர் வெயிலில் கஷ்டப்படுவோர்களுக்கு நீரேற்றமாக வைத்திருப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார். குளிர்ந்த தண்ணீர் பாட்டில்களை தனது வாகனத்தில் வைத்து கடுமையான வெயிலில் நடந்து செல்லும் அனைவருக்கும் வழங்கி வருகிறார்.

இது போன்ற நல்ல உள்ளங்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இன்னும் இது போல பலரும் தங்களால் முடிந்தவற்றை இந்த கோடை காலத்தில் செய்து வருகிறார்கள் அவர்களுக்கும் நமது வாழ்த்துக்களை இதன் வழியாக தெரிவித்து கொள்கிறோம்.

Our Facebook Page

ALSO READ:
குதிரைவாலி அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகள்.!
சிவப்பு அரிசியின் அற்புதமான நன்மைகள்.!
உயரமான கட்டிடத்தில் சாகசம் செய்து வீடியோ எடுத்த பெண் கைது!
விசிட் விசாவில் அமீரகத்திற்கு வருவபவர்களுக்கு முக்கிய பயண ஆலோசனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *