Expo 2020

எக்ஸ்போ 2020 முன்னிட்டு அமீரகம் முழுவதும் 18 இடங்களில் இருந்து இலவச பேருந்து சேவை

760

எக்ஸ்போ 2020 முன்னிட்டு அமீரகம் முழுவதும் 18 இடங்களில் இருந்து இலவச பேருந்து சேவை.

Free bus service from 18 locations across the UAE ahead of Expo 2020

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் 18 இடங்களில் இருந்து எக்ஸ்போ 2020க்கு வருகை புரியும் பார்வையாளர்களை அழைத்து வர எக்ஸ்போ ரைடர்ஸ் பேருந்து சேவை வழங்க உள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள் அனைத்தும் இலவசமாக செயல்பட உள்ளது என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகம் முழுவதும் 18 இடங்களில் இருந்து இந்த இலவச பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளது. அதாவது அபுதாபியின் மூன்று இடங்களிலிருந்தும், ஷார்ஜாவில் இரண்டு இடங்களிலிருந்தும், அஜ்மான், ராஸ் அல் கைமா, புஜைரா மற்றும் அல் ஐன் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலிருந்தும் பேருந்து பயணங்கள் வழங்கப்படும் RTA தெரிவித்துள்ளது. இந்த ஒன்பது இடங்களிலிருந்து பார்வையாளர்களை அழைத்து வருவதற்கு மட்டும் RTA 77 பேருந்துகளை நிறுத்தியுள்ளது.

அதேபோல், துபாயில் உள்ள ஒன்பது நிலையங்களில் இருந்து எக்ஸ்போ கண்காட்சிக்கு பார்வையாளர்களை அழைத்து வருவதற்கு மட்டும் 203 எக்ஸ்போ ரைடர்ஸ் பேருந்துகளை நிறுத்தியுள்ளதாக RTA தெரிவித்துள்ளது. இவற்றில் இரண்டு பேருந்து வழித்தடங்கள் பார்வையாளர்களை எக்ஸ்போ தளத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் இருந்து நேரடியாக அழைத்துச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி நகரில் உள்ள மூன்று நிலையங்கள்:

அபுதாபி சர்வதேச விமான நிலையம், அபுதாபி பேருந்து நிலையம், மெரினா மால் நிலையம் மற்றும் அல் ஐனில் (அல் ஐன் பேருந்து நிலையம்) ஒரு நிலையம் ஆகிய இடங்களில் இருந்து எக்ஸ்போ ரைடர்ஸ் இயக்கப்படும்.

அதே போல் ஷார்ஜாவில் அல் ஜுபைல் பேருந்து நிலையம் மற்றும் முவைலே பேருந்து நிலையத்திலும் இருந்தும், ராஸ் அல் கைமா பேருந்து நிலையத்திலிருந்தும், அஜ்மான் பேருந்து நிலையம் மற்றும் புஜாயிரா பேருந்து நிலையத்திலிருந்தும் எக்ஸ்போ பேருந்துகள் இயக்கப்படுகிறது. வார நாட்களில் ஒரு நாளைக்கு 287 தடவையும் இருக்கும், வார இறுதி நாட்களான வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 358 தடவையாக உயர்த்தப்படும் என்று RTA வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

126 எக்ஸ்போ ரைடர்ஸ் பேருந்துகளை ஒன்பது நிலையங்களிலிருந்து நேரடியாக எக்ஸ்போ தளத்திற்கு பார்வையாளர்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளது. அவை, பாம் ஜுமைரா, அல் பரஹா, அல் குபைபா, எடிசலாட், குளோபல் வில்லேஜ், இன்டர்நேஷனல் சிட்டி, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ், துபாய் மால் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் (முனையம் 3) ஆகிய இடங்களில் இருந்து ஒரு நாளைக்க 455 முதல் 476 தடவை பேருந்துகள் இயக்கப்படும்.

அதே போல் பார்வையாளர்களை ஒரு கேட்டில் இருந்து மற்ற கேட்களுக்கு அழைத்து செல்வதற்கும் வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்போ ரைடர்ஸ் பேருந்து சேவை நேரம்

எக்ஸ்போ ரைடர்ஸ் காலை 6.30 மணி முதல் செயல்படும் மற்றும் எக்ஸ்போ கேட்ஸ் மூடப்பட்ட பிறகு 90 நிமிடங்கள் வரை சேவை தொடரும். பார்க்கிங் பகுதியில் இருந்து மூன்று எக்ஸ்போ கேட்களுக்கும் காலை 9 மணிக்கு தொடங்கும் மற்றும் எக்ஸ்போ கேட்ஸ் மூடப்பட்ட பிறகு 90 நிமிடங்கள் சேவைகள் இருக்கும்.

Our Facebook Page

Keywords: Gulf News Tamil, Dubai News in Tamil, Expo 2020, Free bus service, GCC Tamil News




%d bloggers like this: