Four days of rain in the Emirates

நான்கு நாட்களுக்கு மழை; எச்சரிக்கை விடுத்துள்ளது அமீரகம்!

98

நான்கு நாட்களுக்கு மழை; எச்சரிக்கை விடுத்துள்ளது அமீரகம்!

Four days of rain in the Emirates

நவம்பர் 15-18 தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப் பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.

நவம்பர் 15, புதன்கிழமை மேகமூட்டத்துடன் இருக்கும். மாலையில் மழைப் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமீரகத்தின் கிழக்கு, வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மின்னலுடன் மழைப் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துபாய்-சார்ஜா முக்கிய சாலையின் வேக வரம்பு குறைக்கப்பட்டது.

சர்க்கரைவள்ளி கிழங்கு நல்லதா கெட்டதா கரெக்டா தெரியனுமா?

அமீரகத்தின் கிழக்கு பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும் மற்றும் மழைப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை வானிலைச் சீராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபகாலமாக இதமான வானிலை நிலவுகிறது. கடந்த திங்கட்கிழமை மிகக் குறைந்த வெப்பநிலைப் பதிவாகியுள்ளது. அல் ஐனில் உள்ள ரக்னாவில் 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருந்தது. துபாயின் அல் மர்மூம் மற்றும் லஹ்பாப் உள்ளிட்ட பிற பகுதிகளில் அன்றைய தினம் 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பதிவாகி இருந்தது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஐந்து நாள் வானிலை முன்னறிவிப்பின்படி, வியாழக்கிழமை வெப்பநிலை மேலும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழைப் பெய்தது. தாழ்வான பகுதிகள் மற்றும் தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கின, அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக மழைப் பெய்ததால் மலைகளில் இருந்து தண்ணீர் வர ஆரம்பித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது மழைக்காலம்தான் என்றாலும் மழை வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாகத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர்த் தெரிவித்ததாக அமீரகத்தின் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

Our Facebook Page

Traditional Kitchen

Keywords: Four days of rain in the Emirates, Dubai News, Sharjah news, dubai tamil news, uae tamil news, Four days of rain.




Leave a Reply

%d
Verified by MonsterInsights