ADVERTISEMENT
Flying taxi introduced in Saudi Arabia for Hajj pilgrims

ஹஜ் யாத்திரிகர்களுக்காக சவூதி அரேபியாவில் பறக்கும் டாக்சி அறிமுகம்

Flying taxi introduced in Saudi Arabia for Hajj pilgrims

ஹஜ் செய்யும் புனித இடங்களில் புதிய பறக்கும் டாக்சியை போக்குவரத்து மற்றும் தளவாடத்துறை அமைச்சர் புதன் கிழமை (நேற்று)அறிமுகப்படுத்தினார். இந்த மின்சார பறக்கும் டாக்சி, உலகில் முதன்முதலாக, ஹஜ் யாத்திரையின் போது மீனா, முஸ்தலிபா மற்றும் அறஃபாத் ஆகிய புனித இடங்களுக்கு யாத்திரிகர்களை கொண்டு செல்ல சோதனை செய்யப்படுகிறது.

இதன் அறிமுக நிகழ்வில் GACA (General Authority of Civil Aviation) தலைவர், போக்குவரத்து துணை அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு இயக்குனர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் அதில் கலந்து கொண்டனர்.

லிலியம் எனப்படும் இந்த பறக்கும் டாக்சிகள் முழுவதுமாக மின்சார சக்தியில் இயங்குதாகும். பறக்கும் டாக்சிகள் பெரும்பாலும் அவசர சேவைகள், பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும்.

இந்த பறக்கும் டாக்சிகளைப் பயன்படுத்துவதானது, குறிப்பாக நெரிசல் பகுதிகள் மற்றும் அவசர நிலைகளில் பயண நேரத்தை குறைக்கும் என்று GACA தலைவர் கூறினார். பறக்கும் டாக்சி GACA ஆல் உரிமம் பெற்றது மற்றும் யாத்திரிகர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அழைத்து செல்ல உதவும்.

ADVERTISEMENT

இந்த வருடம் ஹஜ் யாத்திரைக்காக 32 புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இதில் பறக்கும் டாக்சிகளும் அடங்கும். சவூதி அரேபியன் விமான நிறுவனமான (சவூதியா) ஜெத்தா விமான நிலையம் மற்றும் மக்கா ஹோட்டல்களுக்கு இடையே யாத்திரிகர்களை எடுத்துச் செல்ல 100 லிலியம் பறக்கும் டாக்சிகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.

இப்போது, யாத்திரிகர்கள் இந்த புதிய பறக்கும் டாக்சிகளை ஹஜ் யாத்திரையின் போது அனுபவிக்கலாம். யாத்திரிகர்களின் பயணத்தை எளிதாகவும் விரைவாகவும் செய்ய சவூதியா இந்த பறக்கும் டாக்சிகளை எதிர்காலத்தில் பயன்படுத்தத் தயாராகி வருகிறது என்று சவூதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Keywords: Flying taxi, Saudi Arabia News, Saudi Arabia Tamil News, GCC Tamil News, Gulf news Tamil

Our Facebook Page

ALSO READ:
குவைத்: கட்டிடத் தீவிபத்தில் 41 பேர் மரணம், பலர் காயம்
அபுதாபி-திருச்சி இடையே மேலும் ஒரு விமான சேவை
துபாய் விமான நிலையத்தில் ஹஜ் பயனிகளுக்காக சிறப்பு கவுன்டர்கள்

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *