Flax seeds benefits

ஆளி விதை பயன்கள்..! Aali vithai payangal..!

2319

ஆளி விதை பயன்கள் || Flax seeds benefits in Tamil.

Higlights:

◊ஆளி விதையில் நிறைந்துள்ள சத்துக்கள்.

◊ஆளி விதை மருத்துவ குணங்கள்.

◊ஆளி விதையை எப்படி பயன்படுத்தலாம்.

◊உடல் எடை குறைய.

ஒருசில விதைகளில் ஏகப்பட்ட பலன்கள் இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆளி விதையும் ஒன்று. ஆளி விதை சிறியதாக பழுப்பு நிறத்தில் இருக்கும்.  இதில் என்னற்ற மருத்துவ பலன்களை தரக்கூடிய ஊட்டச்சத்துகள் இருக்கிறது. அவை என்னன்ன? என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாகப் பார்ப்போம். அதாவது ஆளி விதையில் உள்ள சத்துக்கள், அதன் மருத்துவ பயன்கள் மற்றும் இந்த விதையை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

ஆளி விதையில் நிறைந்துள்ள சத்துக்கள்: Aali vithai payangal

  • அதாவது ஒரு 100 கிராம் ஆளிவிதையில் 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதச்சத்தை தரக்கூடியது.
  • புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்கள் உள்ளன.
  • இந்த மூன்று சத்துகளும் இரத்தக்குழாய்களை சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன.
  • நாம் உண்ணும் பல உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் அதில் லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இந்த லிக்னன்ஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ குணங்கள்: Aali vithai Maruthuva Kunangal

  • இதிலுள்ள நார்ச்சத்து உடலில் அண்டிக்கிடக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
  • அதிகபடியான நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை போக்குகிறது. ஆளிவிதையை அதிகளவில் உட்கொள்ளும்போது, வயிறு மற்றும் குடல் பகுதிகள் நல்லவிதமாக இருக்கும்.
  • இந்த விதையினை தினமும் சாப்பிடுவதினால் இதைய நோய் சம்மந்தப்பட்ட எந்த நோயும் அவர்களை தீண்டாமல் பாதுகாக்கும். மேலும் மூளைக்கு செல்லும் சக்தியை அதிகரிக்க செய்யும்.
  • பக்கவாதம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆளி விதையை தினமும் ஒரு கைப்பிடியளவு சாப்பிட்டுவர பக்கவாதம் பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.
  • சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிட்டுவர சிறுநீரகத்தில் ஏற்படு அழற்சியை குறைக்கும். சிறுநீரகம் ஆரோக்கியமாக பாதுகாக்கப்படும். எனவே சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தினமும் ஒரு கையளவு ஆளி விதையை சாப்பிடுங்கள்.
  • மலச்சிக்கலால் அவஸ்த்தைப்படுபவர்கள் தினமும் ஆளிவிதையை சாப்பிட்டு வர. இவற்றில் இருக்கும் நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும்.
  • சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமல் ஆளி விதை பாதுகாக்கும். இந்த ஆளி விதையை சாப்பிட்ட பிறகு தேவையான அளவு நீரினை குடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மலச்சிக்கல் அல்லது வாயு தொல்லையை உண்டாக்கிவிடும்.
  • சில பெண்களுக்கு ஹார்மோன்கள் குறைப்பாட்டினால் முடி கொட்டுதல், உயர் இரத்த அழுத்தம், மனஉளைச்சல் இவை அனைத்தும் ஏற்படும். இப்படி பட்டவர்கள் தினமும் ஆளி விதையை ஒரு கையளவு சாப்பிட்டுவர உடலுக்கு தேவையான ஹார்மோன்களை வழங்கும்.
  • குறிப்பாக ஆளி விதை மாதவிடாயை ஒழுங்குபடுத்தும், அந்த சமயங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலை வலி, பதற்றம் போன்ற பிரச்சனைகளை இந்த ஆளி விதை கட்டுப்படுத்தும்.
  • ஆளிவிதை மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளிவிதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. எனவே புற்று நோய் நமக்கு வராமல் இருக்க தினமும் இந்த ஆளி விதைகளை ஒரு கையளவு அவித்தோ அல்லது பொடி செய்தோ சாப்பிடுங்கள்.

ஆளி விதையை எப்படி பயன்படுத்தலாம்: Aali vithai eppadi Payanpaduthalam. 

  • ஆரோக்கியம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடி செய்து சாப்பிடலாம்,
  • முளைக்கட்ட வைத்து சாப்பிடலாம் அல்லது உணவில் தூவி சாப்பிடலாம். இருப்பினும் இந்த ஆளி விதையை பொடி செய்து அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதினால் உடலுக்கு முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.
  • ஆளி விதையை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அவித்து சுண்டல் போல் தாளித்து சாப்பிடலாம்.

உடல் எடை குறைய: Udal edai Kuraiya Aali vithai.

ஆளிவிதையை பவுடர் போல் நைசாக அரைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும். ஒரு துண்டு இஞ்சியை இடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளரில் மோர் எடுத்து கொண்டு மோருடன் ஒரு ஸ்பூன் அரைத்த ஆளி விதை பொடியுடன் இடித்த இஞ்சியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த மோரினை தினமும் காலை உணவு சாப்பிட்ட பிறகு ஒரு 1/2 மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு மண்டலம் குடித்துவர உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து  எடை குறையும். உடம்பும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.

குறிப்பு:

கர்ப்பிணி பெண்கள் இந்த ஆளி விதை சாப்பிட கூடாது.

எமது பேஸ்புக் பக்கம்

Keywords: Flax seeds benefits,

அவல் உண்பதால் உண்டாகும் பயன்கள்

சாமை அரிசியின் பயன்கள்

பூங்கார் அரிசி இது பூவையருக்கான அரிசி

குதிரைவாலி அரிசியில் உள்ள பயன்கள்

கருங்குறுவை அரிசியின் அற்புத பயன்கள்

சிவப்பு அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்..!

பார்லி அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்

கருப்பு கவுனி அரிசி உண்பதால் உண்டாகும் பயன்கள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இவ்வளவு சத்து இருக்கா?

தினை அரிசியின் பயன்கள் || Thinai rice

‘வெள்ளை சோளம்’ இதன் பயன்கள் தெரிந்து கொள்வோமா?

மருத்துவம் குணம் நிறைந்த மூங்கில் அரிசி..!

 ‘கம்பு’ இந்த தானியத்தில் என்ன சத்துகள் உள்ளது தெரியுமா?

‘கேழ்வரகு’ இது உடல் எடையை குறைக்க உதவும் தெரியுமா?




Leave a Reply

%d
Verified by MonsterInsights