அபுதாபியில் நடந்த விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 5 பேர் பலி. Five killed in Abu Dhabi car crash.
அல் தஃப்ராவின் ஆசாப் பகுதியில் நடந்த விபத்தில் 3 இந்தியர்கள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்துக் குறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையின் மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த அமீரக இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது.
உட்புறச் சாலையில் இருந்து மெயின் ரோட்டில் ஏரிய வாகனத்தை அதிவேகத்தில் வந்த கார் மொதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு காரும் மோதியதினால் இரண்டு வாகனமும் உடனடியாக தீப்பிடித்தது. கார்களில் ஏற்பட்ட தீயினால் விபத்தில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை.
விபத்துக்கள் சம்மந்தமாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் சோர்வாக உணர்ந்தால் வாகனம் ஓட்ட வேண்டாம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
விபத்தில் இறந்த 3 பேரையும் அடையாளம் கண்டு அவர்களுடைய நிறுவனம் மற்றும் அவர்களது வீட்டினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
விபத்து குறித்து அபுதாபி காவல்துறை விசாரித்து வருகின்றது.
Keywords: Abudhabi car accident, accident, uae news, gulf news tamil, Five killed
You must log in to post a comment.