பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம். Fire Accident Prevention Description.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை பிரிவில் தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டால், அதை தடுத்து அங்கிருப்பவர்களை மீட்பது எப்படி என்ற நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் சார்பில் கருத்தரங்கம் மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.
இதில் பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் பணியாளர்கள், கொரோனா சிகிச்சை அளிக்கும் வார்டுகளில் மின்கசிவு, ஆக்சிஜன் கசிவு மூலமாக தீ விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் இருந்து நோயாளிகளை உடனடியாக காப்பாற்றுவது பற்றியும், ஆக்சிஜன் சப்ளை குழாய்களில் கசிவு ஏற்பட்டிருந்தால் தீயினால் உயிர் இழப்பவர்களை விட கடும் புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறப்பவர்களே அதிகம், எனவே அனைத்து அறைகளிலும் புகை கண்டுபிடிப்பான்களை பொருத்தி உடனடியாக கசிவை கட்டுப்படுத்த வேண்டும், என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Keywords: Fire Accident Prevention, Fire Accident, Prevention.
A seminar and description was held on behalf of the Tamil Nadu Fire Department on behalf of the Fire Department as a precautionary measure in the event of a fire at the Corona Patient Treatment Unit at the Perambalur District Government Hospital.
You must log in to post a comment.