வ.களத்தூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் கோழிகள் தீயில் கருகி இறந்தன. Fire accident near V.Kalathur.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வ.களத்தூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கோழிப்பண்ணை நடத்தி வருபவர் பெரியசாமி (வயது 45). இவர் கோழிப்பண்ணையில் சமீபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்த்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மதியம் கோழிப்பண்ணையில் திடீரென தீ பிடித்து மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி செத்தன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து வ.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கோழிப் பண்ணைக்கு அருகே சோளத்தட்டைக்கு விவசாயி ஒருவர் வைத்த தீ கோழிப்பண்ணைக்கு பரவியது தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
keywords: Fire accident, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.