Fines of up to Dh3000 for speeding on UAE roads.

துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் இடையே வாகனம் ஓட்டுபவரா?

100

துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் இடையே வாகனம் ஓட்டுபவரா?

Fines of up to Dh3000 for speeding on UAE roads.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலைகளில் வேகத்தை மீறுபவர்களுக்கு அபராதம், கருப்பு புள்ளிகள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்வது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல் இத்திஹாத் சாலை வழியாக தினமும் துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் இடையே வாகனம் ஓட்டும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்களில் நீங்களும் ஒருவரா? அப்படி என்றால் உங்களுக்காத் தான் இந்தப் பதிவு.

நேற்று அல் இத்திஹாத் சாலையில் வேக வரம்பு குறைக்கப்பட்ட செய்தி வெளியிட்டிருந்தோம். இன்று வேக வரம்பு மீறுபவர்களுக்கு அபராத விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகமான அபராதத்தை தவிர்க்க வேகத்தைக் குறைத்து புதிய வேக வரம்பை பின்பற்ற மறக்காதீர்கள்.

வரும் நவம்பர் 20 முதல் மேல் குறிப்பிட்ட சாலையின் வேக வரம்பு 100 கிமீ முதல் 80 கிமீ வரை குறைக்கப்படும் என்று அதிகாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தனர்.

அல் இத்திஹாத் சாலையில் ஷார்ஜா-துபாய் எல்லையில் இருந்து அல் கர்ஹூத் பாலம் வரை, விதிமுறைகள் அமலில் இருக்கும் பகுதியில் புதிய போக்குவரத்துப் பலகைகள் வைக்கப்படுவதை ஓட்டுநர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமானது அமீரகத்தின் போக்குவரத்து விதிமீறல் ஆகும். இது வாகன ஓட்டுநர் வரம்பை மீறும் அளவைப் பொறுத்து திர்ஹம் 300 முதல் திர்ஹம்3,000 வரை அபராதம் விதிக்கப்படும். சில நேரங்களில் கருப்பு புள்ளிகள் மற்றும் வாகன பறிமுதல் ஆகியவற்றுடன் அபராதமும் விதிக்கப்படும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு நல்லதா கெட்டதா கரெக்டா தெரியனுமா?

வெள்ளை சோளம் ஆரோக்கியமானதா?

ஐக்கிய அரபு அமீரகத்தின் போக்குவரத்து சட்டத்தின்படி அபராத விவரங்கள்:

  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 20 கிமீக்கு மிகாமல் மீறினால்: திர்ஹம் 300 அபராதம்
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 30 கிமீக்கு மிகாமல் மீறினால்: திர்ஹம் 600 அபராதம்
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 40 கிமீக்கு மிகாமல் மீறினால்: திர்ஹம் 700 அபராதம்
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 50 கிமீக்கு மிகாமல் மீறினால்: திர்ஹம் 1,000 அபராதம்
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 60 கிமீக்கு மிகாமல் மீறினால்: திர்ஹம் 1,500 அபராதம், 6 கருப்பு புள்ளிகள் மற்றும் வாகனம் 15 நாள் பறிமுதல்
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 60 கி.மீ.க்கு மேல் மீறினால்: 2,000 திர்ஹம், 12 கருப்பு புள்ளிகள், வாகனம் 30 நாள் பறிமுதல்
  • அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 80 கிமீக்கு மேல் சென்றால்: 3,000 திர்ஹம் அபராதம், 23 கருப்பு புள்ளிகள் மற்றும் வாகனம் 60 நாள் பறிமுதல்
  • சாலையில் அமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வேக வரம்பிற்குக் கீழே வாகனத்தை தக்க காரணமின்றி ஓட்டினால்: 400 திர்ஹம் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Facebook Page

Traditional Kitchen

Keywords: Fines of up to Dh3000, Dubai News, Sharjah news, dubai tamil news, uae tamil news,




Leave a Reply

%d
Verified by MonsterInsights