பெரம்பலூரில் நாளை மறுநாள் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம். Farmers grievance meeting in Perambalur.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நடக்கிறது. கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருட்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
keywords: Farmers grievance meeting, Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம்
You must log in to post a comment.