விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய அழைப்பு.
Farmers call for crop insurance.
பெரம்பலூா் மாவட்டத்தில் மக்காச்சோளம், சின்ன வெங்காயம், பருத்தி மற்றும் நெல் பயிா்களுக்கு பயிா் காப்பீடு செய்ய ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு அக். 31 ஆம் தேதிக்குள், சின்ன வெங்காயத்துக்கு அக். 30 ஆம் தேதிக்குள், நெல்லுக்கு நவ, 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும். மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 296, பருத்திக்கு ரூ. 560, சின்ன வெங்காயத்துக்கு ரூ. 1,976, நெல் பயிருக்கு ரூ. 537 காப்பீடு செய்ய பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் நடப்பில் உள்ள சேமிப்புக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிா் காப்பீடு செய்து பயனடையலாம் என, ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Perambalur Seithigal, Farmers call for crop insurance, crop insurance,
You must log in to post a comment.