farmer death

பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

501

பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார். farmer death

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மருது(வயது 55). விவசாயியான இவர் சொந்த வேலையாக செட்டிகுளம் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு பஸ்சில் திரும்பி வந்தார். காரை பிரிவு ரோடு அருகே அவர் பஸ்சில் இருந்து இறங்கியபோது தவறி சாலையில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுபற்றி பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினத்தந்தி

Keywords: farmer death




%d bloggers like this: