கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
Farmer complaint
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பரவாய் மேற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம். விவசாயியான இவர் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில், வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் வாங்கி தருவதாக, கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் ஒருவர் என்னுடைய நிலத்தின் பெயரில் உள்ள ஆவணங்களையும், எனது கையெழுத்தையும் பெற்றுக் கொண்டு கடன் தொகையை அவரே வாங்கி கொண்டார்.
கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை தமிழக அரசு தற்போது தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம், அவர் பயன் அடைந்துள்ளார். இதே போல் அவர், பலரின் நிலத்தின் பெயரில் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாய கடன் பெற்று அரசையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இது தொடர்பான மனுவினை அவர் மாவட்ட கூட்டுறவு கடன் சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலத்திலும் கொடுத்தார். முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் மனு அனுப்பியுள்ளார்.
Keywords: keywords: Perambalur, Perambalur News, Perambalur News Today, பெரம்பலூர், பெரம்பலூர் மாவட்டம், Farmer-complaint,
You must log in to post a comment.