farmer committed suicide

செட்டிகுளத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை.

369

செட்டிகுளத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை. The farmer committed suicide.

பெரம்பலூர் மாவட்ட ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் வசித்தவர் நடராஜன் (வயது 60). கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை அறிந்த, அருகில் வசிப்பவர்கள் நடராஜனை மீட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Keywords: farmer committed suicide, farmer suicide,




%d bloggers like this: