Famous comedian

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார்.

216

பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு காலமானார். Famous comedian and character actor Pandu has passed away.

தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் பாதிப்பால் உயிரிழப்புகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு இன்று அதிகாலை காலாமானார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். தீவிர சிகிச்சையில் இருந்தும் இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி குமுதாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பாண்டுவின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Our facebook

Keywords: Actor Pandu, Famous comedian, passed away,

Popular comedian and character actor Pandu, who was undergoing corona treatment at a private hospital, passed away today.

Pandu, a popular comedian and character actor in the Tamil film industry, passed away this morning. Pandu and his wife Kumuda were undergoing treatment at a private hospital in Chennai due to corona infection. Actor Pandu, who was undergoing intensive treatment, passed away this morning. His wife Kumutha is undergoing intensive treatment at the hospital.




%d bloggers like this: