அஜ்மானில் பிரபல உணவகங்களின் பெயரில் போலி இணையதளங்கள்..! Fake websites in the name of popular restaurants in Ajman.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சில மாதங்களாக அஜ்மானில் உள்ள முக்கிய உணவகங்களின் பெயரில் போலியான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு அவை சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. உணவினை ஆர்டர் செய்யும் வசதி மூலமாக மக்களை கவர்ந்து அவர்களது கிரெடிட்கார்டு, அக்கவுண்ட் நம்பர் போன்ற முக்கிய தகவல்களை இந்த இணையதளங்கள் திருடுகின்றன.
இதுமாதிரியான புதிய இணையதளங்களைக் கண்டால், அதன் அட்ரஸ் தெளிவாக உள்ளதா? அந்த இணையதளம் எங்கிருந்து செயல்படுத்தப்படுகிறது. அதில் தந்துள்ள தொலைபேசி எண்கள் போன்றவற்றை உறுதி செய்தபிறகு உணவுப்பொருட்களை வாங்குங்கள் என்று அஜ்மான் காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அஜ்மான் காவல்துறை தமது அதிகாரப்பூர்வ சமூகதளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,”போலியான இணையதளங்களை நம்பி, உங்களது பணத்தினை இழக்காதீர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Keywords: Fake websites, Ajman News, gulf news, daily gulf news, gcc news tamil, gulf news tamil