அழகான சருமத்தைப் பெற அருமையான பேஷியல் டிப்ஸ்..! Facial Tips
அழகான சருமத்தை பெறுவதற்கு நமது வீட்டில் இருந்தே செய்துகொள்ள வசதியாக எளியமுறையில் பேஷியல் டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. முகத்திற்கு பேஷியல் செய்வதன் மூலம் நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்திற்கு பொலிவினை தரும். பேஷியல் செய்வதால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகிறது.
வினிகர் பயன்படுத்தி பேஷியல்: Facial Tips in Tamil
ஒரு சுத்தமான சிறிய பாத்திரம் எடுத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு ஒரு காட்டன் பேட் எடுத்து மேற்சொன்ன கலவையில் நனைத்து முகத்தில் தடவேண்டும். இப்படி முகத்தில் தடவுவதன் மூலம் தோலில் இருக்கும் அழுக்குகள் வெளியேறி சருமம் சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். மேலும் சருமத்தில் ஏற்படும் பருக்கள் அகன்றுவிடும்.
அரிசி மாவுடன் உருளைக்கிழங்கு சாறு: tips for skin
சுத்தமான பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் உருளைக்கிழங்குச் சாறுடன் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு இந்த கலவையை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.
முகத்தை கழுவாமல் சிறிது நேரம் முகத்தில் நீராவி (steam) பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும். காரணம், முகத்திற்கு நீராவி பிடிப்பதினால் முகம் மென்மையாகவும், சருமத்தில் உள்ள கருமை அகன்று முகம் பிரகாசமாக இருப்பதுடன் செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.
தயிர் மற்றும் உருளைக்கிழங்கு சாறு:
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு இவை இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் இதமாக மசாஜ் செய்ய வேண்டும். 10 அல்லது 15 நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரைக்கொண்டு கழுவவும். இப்படி செய்வதன் மூலம் சருமம் மென்மையாவதுடன், தோலில் உள்ள செல்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
பேஸ்பேக் (face pack)
பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு, ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகருடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அற்புதமான பேஸ்பேக் ரெடி! இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இப்படி பேஸ் பேக் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். அதாவது சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், தோல் வறட்சி, முகத்தில் எண்ணெய் பசை போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.
என்ன தோழிகளே இனிமேல் பேஷியல் செய்ய பியூட்டி பார்லர் போக வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன். இதை செய்து பாருங்கள் நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.
Keywords: glowing skin tips, tips glowing skin, how to get the glow skin