ஆரஞ்சு பழம் கொண்டு ஃபேஸ் பேக் போடுவோமா

ஆரஞ்சு பழம் கொண்டு ஃபேஸ் பேக் போடுவோமா?

538

ஆரஞ்சு பழம் கொண்டு ஃபேஸ் பேக் போடுவோமா? face pack with orange fruit.

ஆரஞ்சு பழத்தை கொண்டு முகத்தை அழகாக்குவது எப்படி?

How to beautify the face with orange fruit? in Tamil

பெண்கள் இந்த குளிர் காலத்தில் தங்கள் சருமத்தை பாதுகாக்க மெனக்கெடுவார்கள். அவர்களுக்கு இந்த டிப்ஸ் உதவியாக இருக்கும் என்று  நம்புகிறோம்.

ஆரஞ்சு பழத்தை வைத்துதான் முகத்தை அழகாக்க போகிறோம். ஆரஞ்சு பழமானது சருமத்தின் நிறத்தை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் சருமத்தின் இளமையைப் பாதுகாப்பதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி, இறந்த செல்களை வெளியேற்றி, சருமத்தை பொலிவோடு பளிச்சென்று வெளிக்காட்டும்.

இப்படி நமக்கு பல வகையில் உதவி செய்யும் இந்த ஆரஞ்சு பழத்தை சும்மா விட்டுவிடுவோமா? இப்போது அந்த ஆரஞ்சு பழத்தைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்ப்போம்.

ஆரஞ்சு மற்றும் தயிர் (Orange and yogurt)

1 டேபிள் ஸ்பூன் தயிருடன் ஆரஞ்சு பழச்சாற்றினை சிறிது சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமமானது பொலிவோடு இருக்கும்.

ஆரஞ்சு பழம் மற்றும் மைதா (Orange fruit and maida)

ஆரஞ்சு பழம் கொண்டு ஃபேஸ் பேக் போடுவோமா?மைதாவில் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமம் மென்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

ஆரஞ்சு,எலுமிச்சை மற்றும் தேன் (Orange, lemon and honey)

2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாற்றில், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும்.

ஆரஞ்சு, முல்தானி மெட்டி மற்றும் பால் பவுடர்

(Orange, Multani Matti and milk powder)

1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டீஸ்பூன் பால் பவுடர் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு பழம் தோல் பவுடர் மாஸ்க்  (Orange Mask)

ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து பொடி செய்து, பின் அதில் ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது சந்தன பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் இருந்தாலும் போய்விடும்.

அப்புறம் என்ன நாளையில் இருந்து ஆரஞ்சு பழத்தை வாங்கி சாப்பிட்டு கொண்டே ஃபேஸ் பேக் போட்டுக்கோங்க.

Our Facebook Page
%d bloggers like this: