மொபட்டில் இருந்து நிலைதடுமாறி விழுந்தவர் பலி

கோனேரிபாளையம் அருகே வாகன விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி

374

கோனேரிபாளையம் அருகே வாகன விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி.

Ex-serviceman killed in road accident near Koneripalayam.

விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

அரியலூர் மாவட்டம் ஆங்கியனூரை சேர்ந்தவர் ராஜா(வயது 48). முன்னாள் ராணுவ வீரரான இவர் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் கோனேரிபாளையம் அருகே மலைப்பாதை பிரிவில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே உடும்பியத்தில் இருந்து தூத்துக்குடிக்கு சர்க்கரை ஏற்றிச்சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த ராஜா, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரணி, தேவிஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஊர்க்காவல் பெருமாளை (43) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

Our Facebook Page

Keyword: Ex-serviceman killed,
%d bloggers like this: