ரூ.85 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் பொறியாளர் வேலை! Engineer job in Central Government.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான CEIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரூபாய்.85 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
Engineer job in Central Government.
நிர்வாகம் : Certification Engineers International Ltd (CEIL)
மொத்த காலிப் பணியிடம் : 109
பணி : Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist மற்றும் Officer உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலிப் பணியிடங்கள் : 109
கல்வித் தகுதி : பொறியியல், டிப்ளமோ, எம்பிஏ போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.41,250 முதல் ரூ.85,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : www.ceil.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து [email protected] என்ற முகவரியில்
விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ceil.co.in லிங்க்கை கிளிக் செய்யவும்.
Keywords: engineer job
You must log in to post a comment.