பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு.

230

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வு தேதி அறிவிப்பு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் செய்திருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதிவரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதற்கு கொரோனா காலத்தில் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் தேர்வுகளை நடத்துவதா என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ட்ரண்டிங் வீடியோ காட்டு நாயை துரத்தும் புலி.

பெரம்பலூர் மாவட்ட அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக இன்று முதலமைச்சருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அதாவது, ஜூன் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

பொதுத் தேர்வு தேதிகள்

அதேபோல மார்ச் 26 ஆம் தேதி நடத்தப்பட இருந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (வேதியியல், புவியியல், கணக்கியல்) ஜூன் 16 ஆம் தேதி நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Leave a Reply

%d bloggers like this: