பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை.

பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை

275

பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை.

[the_ad id=”7250″]

பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை. தமிழக அரசிற்கு உட்பட்ட தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக அரசின் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் அரியலூரில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், சமூகப் பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியானது தற்காலிக பணியிடம் ஆகும்.

பெரம்பலூா் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் சாவு

தற்போது காலியாக உள்ள ஒரு சமூகப் பணியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு குழந்தைகள் சார்ந்த பணியில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும், உளவியல், சமூகப்பணி, சமூகவியல் வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட சமூகப்பணியாளர் பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ariyalur.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் – 621 704 என்னும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Leave a Reply

%d bloggers like this: