திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு!

227

திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு!

[the_ad id=”7250″]

திருச்சி ஊராட்சி வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில், திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருச்சி மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர்.

பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் வேலை

கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரவு காவலர் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்குக் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பு பிரிவினருக்கு ஏற்றாற் போல் மாறுபடும். அதன்படி, OC – 30, MBC / BC – 32, SC / ST – 35, SC(A) – 35 என்ற வகையில் உச்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் மண்ணச்சநல்லூர் ஒன்றிய ஊராட்சி பகுதிக்கு உட்பட்டவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், சுய சான்றொப்பமிட்ட விண்ணப்பம் தயாரித்து, ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையர் ஊராட்சி ஒன்றியம், மண்ணச்சநல்லூர், திருச்சி

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்குகளைக் காணவும்.
Leave a Reply

%d bloggers like this: