Elumbu Valimaikku Calcium sathu Miguntha Unavugal
எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க சித்த மருத்துவத்தில் பல பயனுள்ள முறைகள் உள்ளன. அவற்றை முழுமையாகப் பின்பற்றினால், எலும்புகள் பலப்படுவதுடன், உடல் நலனும் மேம்படும்.
- கொள்ளு ரசம்:
10 கிராம் கொள்ளுவுடன் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி சேர்த்து ரசமாகக் காய்ச்சி, தினமும் குடிக்கலாம். இது எலும்புகளை உறுதியாக்கி, தேவையற்ற கொழுப்பு மற்றும் சதையை குறைக்க உதவும். - கால்சியம் நிறைந்த உணவுகள்:
பால், தயிர், பாலாடைக்கட்டி, பீட்ரூட், எள், முட்டைக்கோஸ், பிராக்கோலி, திராட்சை, மாதுளை, முட்டை, மீன், கோழி, காடை, இறைச்சி போன்றவை எலும்புகளுக்கான முக்கிய கால்சியம் சத்து கொண்ட உணவுகள். - கீரை வகைகள்:
வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் கீரை, கொத்தமல்லி போன்ற கீரைகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். - அதிகாலை/மாலை நடைபயிற்சி:
தினமும் அதிகாலை அல்லது மாலை நேரத்தில் சிறிது நேரம் வெயிலில் நடந்து வந்தால், உடலில் விட்டமின் டி சத்து உறிஞ்சும். - லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்களுக்கு:
பாலுக்கு பதிலாக சோயா பால், பாதாம் பால், பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவைகள் தினசரி தேவையான 1 கிராம் கால்சியத்தை உடலுக்கு வழங்கும். - குங்குமப்பூ ஆயில்:
1 கிராம் குங்குமப்பூவை 100 மில்லி தேங்காய் எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி, அதன் இரண்டு துளிகளை உட்கொண்டு, மாலை இளவெயிலில் நடைபயிற்சி செய்து வந்தால், உடலில் விட்டமின் டி சத்து எளிதில் உறிஞ்சும். - எலும்பொட்டிக் கீரை:
எலும்பொட்டிக் கீரையின் இலையை பாலுடன் அரைத்து, காலை, மாலை இருவேளையும் ஒரு நெல்லிக்காய் அளவு அளவில் உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட்டு வர எலும்புகள் வலுவடையும். - பிரண்டை தண்டு:
பிரண்டையில் அதிகளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால், அதனை புளியுடன் சேர்த்து, துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும். - எலும்பு முறிவுக்குப் பின்பு:
பிரண்டைச் சாறு, எலும்பொட்டிக் கீரைச் சாறு, மஞ்சிட்டி, சுக்கு, நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி, அது எண்ணெய் பதத்தில் மாறிய பின்பு, முறிவு உள்ள இடத்தில் தேய்த்து, துணியால் கட்டி வந்தால், எலும்புகள் விரைவில் கூடி, வலி, வீக்கம் குறையும். - சித்த மருத்துவம்:
பவள பற்பம், முத்துப் பற்பம், முத்துச் சிப்பி பற்பம், சங்கு பற்பம், பலகரை பற்பம் போன்றவை எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவாக இணையதளங்களில் கிடைக்கும் தகவல்களாகும். இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். கல்லாறு மீடிய இந்த தகவல்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்தவில்லை.)
Keywords: Elumbu Valimaikku, health tips Tamil, Tamil Health Tips
ஆரோக்கியம் சம்மந்தமான தகவல்களை தமிழில் தெரிந்து கொள்ள Whatsapp Channel ல் இணைந்து கொள்ளுங்கள்.
ALSO READ:
ஏலக்காயின் அற்புத மருத்துவ நன்மைகள்
பிரீடயாபட்டீஸ்: உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம்
கண்களின் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்