Panchayat President

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி

387

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி.

Election for the posts of Panchayat President

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தற்செயல் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கி, கடந்த 22-ந்தேதி வரை நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவரும், 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 15 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை கடந்த 23-ந்தேதி நடைபெற்ற போது மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் ஏற்று கொள்ளப்பட்டது. வேட்பு மனு வாபஸ் பெற விரும்புவர்கள் நேற்று திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இறுதி வேட்பாளர் பட்டியல்

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 2 பேரில் ஒருவரும், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆடுதுறை ஊராட்சி 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 3 பேரில் ஒருவரும் என 2 பேர் நேற்று தங்களது வேட்பு மனுவை திரும்ப (வாபஸ்) பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பிரம்மதேசம் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், வாலிகண்டபுரம் ஊராட்சியில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆடுதுறை ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும் போட்டியிடுகின்றனர். இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 3 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 10 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் அந்தப்பகுதிகளில் தேர்தல் பிரசாரம் களை கட்ட தொடங்கியது.

தினத்தந்தி

Our Facebook Page

Keywords: Perambalur District News, Perambalur Mavattam, Perambalur Seithigal, Panchayat President




%d bloggers like this: