பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி.
Elderly woman killed for corona.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 8 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 9 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 89 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 95 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 386 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 419 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 627 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தினத்தந்தி
Keywords: Perambalur district news, Perambalur news live, Perambalur Mavattam, Perambalur Seithigal, Today Perambalur News, Perambalur news today, Perambalur news daily, Elderly woman killed by corona, Elderly woman
You must log in to post a comment.